×

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்மாநிலத் தலைவராக கே.எம்.காதர் மொகிதீன் தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.எம்.காதர்மொகிதீனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த கல்விப்புலமையும், நெடிய அனுபவமும் கொண்ட அவரது அரசியல் பணி மேலும் சிறக்கவும்; வெற்றிகள் பெறவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

The post இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்மாநிலத் தலைவராக கே.எம்.காதர் மொகிதீன் தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : KM ,Khader Mohideen ,State President ,Indian Union Muslim League Party ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Kadar Mokhideen ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் சாவில் மர்மம்...